October 29, 2018
தண்டோரா குழு
ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.தற்போது வெங்கட்பிரபுவின்’பார்ட்டி’,விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன்பு திமிரு பிடிச்சவன் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய நிவேதா பெத்துராஜ்,
நான் ஒரு பார்ட்டிக்கு சென்றிருந்தேன்.அங்கு என்னை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.தவறு என் மீது தான்.நான் அந்த பார்ட்டிக்கு போயிருக்க கூடாது. போகாமல் இருந்தால் பலாத்கார முயற்சியை தவிர்த்து இருக்கலாம்.இப்போது நான் தெளிவாக இருக்கிறேன்.அதுபோன்று ஒரு சம்பவம் நடந்தால், என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் எனக் கூறியுள்ளார்.மேலும்,மீடு குறித்து சம்பவம் நடந்த உடனே வெளியே சொல்ல வேண்டும்.நீண்ட நாட்கள் கழித்து சொல்வதால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர் எனக் கூறியுள்ளார்.