October 29, 2018
தண்டோரா குழு
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி 5 ஒரு நாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது.இதில் இந்தியா ஒரு போட்டியிலும் மேற்கு இந்திய தீவுகள் அணி ஒரு போட்டியிலும் வென்றுள்ளது.ஒரு ஆட்டம் டிராவில் முடித்துள்ளது.இந்நிலையில்,நான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்த இந்திய அணி தவானை 38 ரன்களுக்கும், கோலியை 16 ரன்களுக்கும் இழந்தது.
அதன் பின் ஜோடி சேர்ந்த ரோஹித் அம்பாதி ராயுடுவும் இணைந்து அதிரடியாக ஆடி அணியை சிறப்பான ஸ்கோருக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.இதில் ரோஹித் சர்மா 162 ரன்களில் ஆட்டமிழந்தார்.சர்மா 121 ரன்கள் எடுத்திருந்த போது 40-வது ஓவரின் ஐந்தாவது பந்தை சிக்ஸருக்கு விளாசினார்.இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில்,சச்சினை ரோஹித் சர்மா முந்தினார்.சச்சின் 195 சிக்ஸர்கள் அடித்திருந்தார். ரோஹித் சர்மா தற்போது 196* சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இந்த பட்டியலில் மகேந்திர சிங் தோனி 218 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.சர்வதேச பட்டியலில் பாகிஸ்தானின் ஷகித் அஃப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.தோனி நான்காவது இடத்திலும்,ரோஹித் சர்மா ஏழாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.