• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்கை வரலாறு படத்தில் நடிக்கும் மாதவன்

October 29, 2018

இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றி வந்த நம்பி நாராயணன் மீது,1994ஆம் ஆண்டில் வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தொடர்பான விவரங்களை உளவுபார்த்து,மாலத்தீவு பெண்கள் மூலம் வெளிநாட்டுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.இந்த வழக்கில் 1994ம் ஆண்டு,நவம்பர் 30ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன்,சசிக்குமார் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நம்பி நாராயணன் 50 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.

இதற்கிடையில்,இந்த வழக்கு கேரள போலீசாரிடம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட பிறகு,நம்பி நாராயணன் மீது குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கண்டறியப்பட்டு,வழக்கு 1996ஆம் ஆண்டில் மூடப்பட்டது.கடைசியாக 1998-ஆம் ஆண்டு இவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விடுதலை செய்தது.சமீபத்தில் நம்பி நாராயணனின் வழக்கு முடிவுக்கு வந்த நிலையில் அதில் வெற்றி பெற்ற நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது.

இதனையடுத்து,தனக்கு நேர்ந்த அனுபவத்தை வைத்து நம்பி நாராயணன் ‘Ready to fire: How India and I survived the ISRO spy case’ என்னும் பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.இந்த சர்ச்சைக்குரிய கதையை இயக்குநர் ஆனந்த் மகாதேவன் படமாக்கவுள்ளார்.தமிழ்,தெலுங்கு,இந்தி மொழியில் தயாராகும் இத்திரைப்படத்தில் மாதவன் நடிக்கவுள்ளார்.இப்படத்தின் டீசர் தொடர்பாக மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராக்கெட்ரி என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் டீசர் வரும் 31-ஆம் தேதி காலை 11.33 மணிக்கு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும்,இந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் கதையின் நாயகன் நம்பி நாராயணன் கலந்துக் கொள்ளும் செய்தியையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் படிக்க