October 30, 2018 தண்டோரா குழு
சர்கார் படத்தின் கதை,தன்னுடைய ‘செங்கோல்’ கதையில் இருந்து திருடப்பட்டது என்று உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.சர்கார் கதையும் செங்கோல் கதையும் ஓன்று தான் என எழுத்தாளர் சங்கத் தலைவரான இயக்குநர் கே.பாக்யராஜ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணையில் சன் பிக்சர்ஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்,செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.இதனால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டு படத்தை வெளியிட தடையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்கார் கதையை ஊடகங்களிடம் தெரிவித்ததற்காக இயக்குநர் பாக்யராஜையும்,அவரது மகன் நடிகர் சாந்தனுவையும் சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் விமர்சித்தனர்.இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.அதில், “சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் “இல்லை” என்றைக்கும் விஜய் அண்ணா,எனக்கு விஜய் அண்ணா தான்!கதையை என் அப்பா வெளியே கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.தீபாவளியை கொண்டாடுவோம்…சர்கார் கொண்டாடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.