October 31, 2018
தண்டோரா குழு
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தோனி ரசிகர்கள் அவருக்கு 35 அடி உயர கட் அவுட் வைத்து அசத்தியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தன் 2 உலகக்கோப்பை வெற்றிகள் மட்டும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே என்ற பிராண்ட் மூலம் உலகம் முழுதும் தனக்கான ரசிகர்களை வென்றெடுத்துள்ளார். இந்திய டி20 அணியிலிருந்து தோனியை நீக்கியது குறித்து தல தோனி ரசிகர்கள் கடும் ஆவேசமாகச் செயல்படத் தொடங்கியுள்ளனர்.எனினும், கேப்டன் கூல் என்ற ரசிகர்களால் அழைப்படும் தோனிக்கு இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மவுசு குறைவில்லை என்றே சொல்லாம்.
இந்தியா-மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே 5வது போட்டி கேரளா, திருவனந்தபுரத்தில் கிரீன்பீல்ட் ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது. இதற்காக இந்தியா அணி கேரளாவிற்கு சென்றுள்ளது.
இந்த மைதானத்துக்கு வெளியே ‘அனைத்து கேரளா தோனி ரசிகர்கள் அமைப்பு’ தோனிக்கு 35 அடி உயர கட்-அவுட் வைத்து உற்சாகத்தை தெரிவித்துள்ளனர். இதனை சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தோனிக்கு கட் அவுட் தயார் செய்வதை வீடியோவாக வெளியிட்டு மகிழ்ந்துள்ளது.