November 1, 2018
தண்டோரா குழு
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.இப்படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தையும் இயக்குனர் சுந்தர்.சி தயாரிக்கிறார்.இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார்.
ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி நட்பு,காதல்,குடும்பம் என அனைத்து கலந்த படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார். தற்போது படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில்,படத்தை அடுத்த வருட துவக்கத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில்,இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற நவம்பர் 4ம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.