November 3, 2018
தண்டோரா குழு
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன்.இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 எனும் பெயரில் தற்போது உருவாகியுள்ளது.இந்தப் படத்தில் எமி ஜாக்ஷன்,அக்ஷய் குமார் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில்,ரஜினி,இயக்குநர் ஷங்கர்,ஏ.ஆர்.ரஹ்மான்,அக்ஷய் குமார்,எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதையடுத்து,2.0 படத்தின் டிரைலர் தமிழ்,இந்தி தெலுங்கு என 3 மொழிகளில் வெளியானது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,
“இந்தியாவின் ‘ஸ்பீல் பெர்க்’ இயக்குநர் ஷங்கர்.இந்த பெரிய முதலீட்டை படத்தின் தயாரிப்பாளர் நம்பி செலவிட்டதற்கு இயக்குநர் ஷங்கர் மட்டும் தான் காரணம்.
இந்த படத்தின் பெருமை அனைத்தும் இயக்குனர் சங்கரையே சேரும்.ஒரு பொழுதுபோக்கு படத்தின் மூலம் நல்ல ஒரு கருத்தையும் படத்தில் கூறியுள்ளோம். உடல்நிலை காரணமாக இந்த படத்தில் இருந்து ஆரம்பத்தில் பாதியிலேயே வெளியேற நினைத்திருந்தேன்.ஆனால் தவிர்க்க முடியாத படமாக 2.0 மாறியது.எப்போது வரனும் என்பது முக்கியமல்ல வெற்றி பெறுவது தான் முக்கியம்.லேட் ஆனாலும் கரெக்டா வரனும்.வந்தாச்சு வெற்றி உறுதியாகிவிட்டது.ஹிட் ஆக்குவதுதான் பாக்கி… நான் படத்தை சொன்னேன்”.இவ்வாறு பேசினார்