November 8, 2018
தண்டோரா குழு
ரஜினியின் ‘2.0’ முடிந்த பிறகு ஷங்கர் அடுத்ததாக இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.முதல் பாகத்தில் நடித்தே கமலஹாசனே இப்படத்திலும் நடிக்கவுள்ளார்.
மேலும்,இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.அதைபோல்,பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடிக்கலாம் என்றும் செய்தி வருகிறது.
இந்நிலையில் ‘இந்தியன்-2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் ஏற்கனவே தமிழில்,‘வாயை மூடி பேசவும்’ படம் மூலம் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.