November 9, 2018
தண்டோரா குழு
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன்.இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 எனும் பெயரில் தற்போது உருவாகியுள்ளது.இந்த படத்தில் எமி ஜாக்ஷன்,அக்ஷய் குமார் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ளது. அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில்,திரைப்படங்களை சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ் 2.0 திரைப்படம் விரைவில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்படும் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே,விஜய்யின் சர்கார் படத்தையும் சொன்னபடி முதல் நாளிலேயே தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.