November 9, 2018
தண்டோரா குழு
லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2′ படத்துக்கு பிறகு நடிகர் விஷால் வெங்கட் மோகனின் இயக்கத்தில் ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தைதொடர்ந்து விஷால் இயக்குநர் ஆனந்த் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில்,விஷால் இயக்குநர் அவதாரம் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அப்படம் தெரு நாய்களை மையப்படுத்தி இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம்.இப்படத்தில் நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.எனினும் விரைவில் இது குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.நடிகர் விஷால் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பு அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.