November 14, 2018
தண்டோரா குழு
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படம் ‘இந்தியன் 2’.ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்திற்கு ஜெயமோகன், கபிலன் வைரமுத்து,லக்ஷ்மி சரவணகுமார் மூவரும் இணைந்து வசனம் எழுதி வருகிறார்கள்.அறிவிப்பு வெளியாகி நீண்ட நாட்களாகியும் இப்படம் குறித்த எந்த பணிகளும் நடைபெறாமல் இருந்தது.இந்நிலையில்,படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் பூஜையுடன் நேற்று துவங்கியது.
இந்நிலையில்,இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிகர் சிம்பு மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தில் நடிப்பதற்கு அவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.ஆனால்,இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.