September 7, 2016 தண்டோரா குழு
எப்.ஐ.ஆர் பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் அதனை இணையதளத்தில் பதிவேற்ற செய்ய வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய இளைஞர் வக்கீல்கள் சங்கத்தினர் தாக்கல் செய்த மனு மீதான வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி. நாகப்பன் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது.
அப்போது ‘முதல் தகவல் அறிக்கை (ஃஎப்ஐஆர்) பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள், இணையதளத்திலும் அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இன்டர்நெட் வேகம் குறைவாக உள்ள இடங்களில் 72 மணி நேரத்திற்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என்ற காரணத்தைக் காட்டி குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆதாயம் தேடக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், தீவிரவாதம், பாலியல் தொடர்பான வழக்குகளில் எப்.ஐ.ஆர் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.’