• Download mobile app
12 Jan 2025, SundayEdition - 3259
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உங்கள் வீட்டு சமையலில் நீங்கள் விளைவித்த காய்கறிகள் – இல்லம் தோறும் இயற்கை உரம் இயக்கம்!

November 17, 2018 த.விக்னேஷ்

நாம் அன்றாடம் பயன்படுத்தி வீணாக்கப்பட்ட கழிவுகளில் இருந்து நமக்கு உணவுக்கு தேவையான இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் கிடைப்பது என்றால் ஆச்சர்யம் தானே.

தினமும் நாம் பயன்படுத்தும் உணவு பொருட்கள்,காய்கறிகள்,பழங்கள் போன்ற அனைத்து மக்கும் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்களில் மூலம் கிடைக்கும் உணவுப்பொருட்களை பற்றியது.

கோவையை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் இயற்கை விவசாயத்தின் மீதும் பெரிதும் அக்கறை கொண்டவர்களின் ஒரு கூட்டு முயற்சி தான் இந்த இல்லம் தோறும் இயற்கை உரம் தயாரிக்கும் இயக்கம்.இந்த இயக்கத்தின் நோக்கம் நமக்கு தேவையான உணவு பொருட்களை அதுவும் முற்றிலும் இயற்கை eco-முறையில் தயாரிக்கும் காய்கறிகள் தான்.

இந்த இயக்கத்தை சேர்ந்த பிரபாகரன் பாரதியார் பல்கலைகழகத்தில் உயிரிதொழில்நுட்பவியலில் இணை பேராசியராக இருக்கிறார். முத்துக்குமார் மென்பொருள் துறையை சார்ந்தவர்.வெவ்வேறு துறையை சார்ந்தவர்கள் இருப்பினும் இயற்கை மற்றும் விவசாயத்தின் மீதுள்ள அளவில்லா பற்று காரணமாகத் தான் இவர்களை ஒருகுழுவாக இணைத்துள்ளது.இவர்களின் இந்த திட்டம் வீட்டு அளவில் திடக்கழிவு மேலாண்மையை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,

“ஒவ்வொரு வீட்டிலும் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் காய்கறிகள்,பழங்களின் கழிவுகள் இதர மக்கும் கழிவுகள் இவை அனைத்தையும் பயன்படுத்தி ஒரு விளைவித்தல் முறையை உருவாக்கி அதில் வெற்றி பெற்றுள்ளோம்.இதை தயாரிக்க கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் எளிதில் கிடைக்ககூடியதால் இவற்றை நாம் சுலபமாக செய்து பார்க்க முடியும்.இதற்கு தேவையான பொருட்கள் ஒரு 20 லிட்டர் அளவுள்ள பக்கெட், பழைய மக்கிய உரம் மற்றும் தென்னை நார்,கழிவு காய்கறிகள் மட்டுமே.

ஒரு குடும்பத்தில் 15 நாட்கள் பயன்படுத்திய குப்பைகளை ஒரு இடத்தில் போட்டு வைத்தால் துருநாற்றம் மற்றும் பூச்சி புழுக்கள் வரும் என்பதால் சில குடும்பங்களை சார்ந்த பெண்கள் இவற்றை கண்டு சிறிது கவலைபடுகின்றனர்.

ஆனால்,அதற்கும் ஒரு நல்ல வழி எங்களிடம் இருக்கிறது.ஊட்டம் ஏற்றிய நுண்ணுயிரி,போன்றவற்றை இதனுடன் இணைத்தால் துருநாற்றம், பூச்சி மற்றும் புழுக்கள் வராமல் தடுக்கும் முடியும்.இதன் மூலம் நமது வீட்டிற்கு தேவைப்படும் அளவு காய்கறிகளை நம்மால் விளைவிக்க முடியும்.இந்த இல்லம் தோறும் இயற்கை உரம் இயக்கத்தை சமீபத்தில் நடைபெற்ற மஞ்சப்பை நிகழ்ச்சி மூலமாக அறிமுகப்படுத்தினோம்.

மேலும்,எங்கள் இயக்கம் விரிவடைய அமெரிக்காவில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர் ராம்நாராயணன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் எங்கள் இயக்கத்தை இன்னும் மேம்படுத்த உறுதுணையாக இருக்கிறது.இந்த இயக்கத்தை தொடங்கும் போது 5 பேர் இருந்ததாகவும் இன்று இது பல்வேறு நபர்களை கொண்ட ஒரு நல்ல இயக்கமாக உருவெடுத்துள்ளது.

பல்வேறு இடங்களில் இன்று இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம்.மேலும் எங்களிடம் 45 பேர் பயிற்சி எடுக்க வருகிறார்கள்.நாங்கள் 1000 பேருக்கு பயிற்சி கொடுக்க இலக்கை நிர்ணயம் செய்துள்ளோம்.

முக்கியமாக மாநகராட்சி 1டன் குப்பைகளை கொட்டுவதற்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்வதாகவும்,நம்முடைய இந்த முயற்சி மூலம் மக்கள் மட்டுமில்லாமல் அரசாங்கமும் பயனடையும்.

இந்த இல்லம் தோறும் இயற்கை உரத்தின் மூலமாக நமக்கு அனைத்து வகை கீரை வகைகளும்,வெண்டைக்காய்,கத்தரிக்காய்,தக்காளி, மிளகாய் போன்ற காய் வகைகளும் மற்றும் புடலங்காய்,பாகற்காய் போன்ற சில கொடிவகைகளும் கிடைக்கின்றன.

இந்த பக்கெட் முறை இயற்கை விவசாயதிற்கு “Vadavalli Umbrella” குடியிருப்பு நல சங்கங்களை சேர்த்தவர்கள் பெரிதும் உறுதுணையாக இருக்கிறார்கள்.எங்களின் அடுத்த இலக்கு டிரம் முறை இதனை விரிவு படுத்துவதே எங்களின் நோக்கம்”.இவ்வாறு கூறினர்.

மேலும் படிக்க