September 8, 2016 தண்டோரா குழு
எஸ். ஆர்.எம். கல்லூரியில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக 75 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்யப்பட்ட வழக்கில் எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவல்துறை ஒரு நாள் காவலில் எடுத்தும் விசாரித்துள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் பச்சமுத்து ஜாமின் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி ஜெயசந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பச்சமுத்து சார்பில் 75 கோடி ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்த தயாராக இருப்பாகத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டார்.
ஜாமீன் நிபந்தனைகள்,
விசாரணை அதிகாரி முன் 15 நாட்களுக்குத் தினமும் பச்சமுத்து கையெழுத்து இட வேண்டும். மேலும் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி 75 கோடி ரூபாயை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.
10 லட்சம் ரூபாய் செலுத்தி இரு நபர் ஜாமின் பெற்றுக் கொள்ள வேண்டும்.விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும்.காலை 10:30 மணி அளவில் 15 நாட்களுக்கு ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும்.பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.உள்ளிட்ட நிபந்தனையுடன் பச்சமுத்துவிற்கு ஜாமின் வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.