November 26, 2018
தண்டோரா குழு
பிக் பாஸ் 1 நிகழச்சி மூலம் பிரலமான ஹரிஷ் கல்யாண் – ரைஸா கூட்டணியில் வெளியான பியார் பிரேமா காதல் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இந்த வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகத்,ஐஸ்வர்யா ஆகியோர் இணையும் படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.
தற்போது மஹத் சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.இந்தப் படத்தை அடுத்து நடிகர் மஹத்துடன் ஐஸ்வர்யா ஜோடி சேரவுள்ளார்.மகத்துடன் ஐஸ்வர்யா ஜோடி சேரவுள்ள ரொமான்ஸ் கலந்த காமெடி படத்தை அறிமுக இயக்குநர் பிரபு ராம் இயக்குகிறார்.இந்த படத்தில் மகத் வட சென்னை இளைஞராகவும்,அவர் காதலிக்கும் பெண்ணாக நடிகை ஐஸ்வர்யாவும் நடிக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு முதலில் நடிகர் ஜி.வி.பிரகாஷை தேர்வு செய்ததாகவும்,பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இந்த கேரக்டர்களில் மஹத்- ஐஸ்வர்யா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகவுள்ளது.