November 26, 2018
தண்டோரா குழு
இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ’96’ படம். பள்ளி பருவக்காதலை மையமாக கொண்டு உருவான இப்படம் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.அதுமட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள்,இயக்குநர்கள் என பலரும் இப்படத்தை கொண்டாடினர்.இதையடுத்து,தற்போது இதன் தெலுங்கு ரீமேக் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில்,96 படத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் படத்தை புகழ்ந்து டுவீட் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“சமீபகாலமாகவே நான் விஜய் சேதுபதியின் ரசிகனாக இருக்கிறேன்.என்னை அப்படியே அடித்துச் சென்றுவிட்டது.இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் காதலே… காதலே பாடல் தனிச்சிறப்பு.அதை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் ரசனை என்று பதிவிட்டுள்ளார். மேலும்,வாஷிங்டன் சுந்தர்,அபிநவ் முகுந்த்,பாசு உள்ளிட்டோரும் இப்படத்துக்கு பெரிய ரசிகர்கள் தான்.என்ன சொல்கிறாய் அஸ்வின்? என்று சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்”.