November 28, 2018
ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 திரைப்படம் வெற்றிகரமாக ஓட வேண்டி, மதுரை திருப்பரங்குன்றத்தில் ரஜினி ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அக்ஷய் குமார் ஆகியோர் நடித்துள்ள 2.0 திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.இந்திய சினிமா உலகில் அதிகபட்ச செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம் 2.0. கடந்த 2010 ல் வெளியான எந்திரனின் இரண்டாம் பாகமாகவே இது எடுக்கப்பட்டுள்ளது.இந்த படம் 550 கோடி செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் மட்டுமே இந்த வாரத்தில் வெளியாகவுள்ளது.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளதால், கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் இந்த படம் வெளியாகிறது. 2.0. படம் ஹாலிவுட் படத்தை பார்ப்பது போல் ரசிகர்களுக்கு இருக்கும் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ள நிலையில் திரை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துவருகின்றனர்.
இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில்
ரஜினி ரசிகர்கள் சிலர் இந்த திரைப்படம் வெற்றிக்கரமாக ஓட வேண்டும் என்று “வெயிலுகாத்த அம்மன் கோவிலில்” சிறப்பு பூஜைகள் செய்தனர். மேலும், ரசிகர்கள் சிலர்மண்சோறு சாப்பிட்டும், அங்கபிரதட்சிணம் செய்தும் வழிபாடு நடத்தினர்.
ஆனால் இந்த படத்துக்கு புது சர்ச்சை எழுந்துள்ளது நாளை வெளியாக உள்ள இந்த படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என்று செல்லுலார் ஆப்பரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (Cellular Operators Association of India or COAI ) சார்பாக சென்சார் போர்டில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சிக்கலால் திட்டமிட்டபடி 2.0 வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.