November 30, 2018
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம் அருண்ராஜா இயக்கும் கானா படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவத்தின் மூலம் இரண்டாவதாக தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் புகழ் ரியோ ராஜ் நடிக்கிறார்.இப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக ஷிரின் நடிக்கிறார்.மேலும்,ராதாரவி,விக்னேஷ்காந்த் நடிக்கின்றனர்.இதற்கு யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.நேற்று முதல் துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,தற்போது இப்படத்தில் பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.