November 30, 2018
தண்டோரா குழு
செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மஹத்,மேஹா ஆகாஷ்,கேத்ரின் தெரசா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் அஜித்தின் விசுவாசம்,ரஜினியின் பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.சிம்பு ரசிகர்கள் பலரும் இப்படத்தின் டீசருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.இதற்கிடையில்,ஏற்கனவே இந்த படத்தின் டீஸர் நவம்பர் 29-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிவிட்டது.
இந்நிலையில் தற்போது டீஸர் குறித்த தகவலை லைகா நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.அதாவது இந்த படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு யூ ட்யூபில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.