• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆள்கடத்தல் தலைநகரமாகிறது டெல்லி

September 12, 2016 தண்டோரா குழு

இந்திய தலைநகரான புதுடெல்லியில் 2015ம் ஆண்டில் சராசரியாக தினமும் 21 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இந்தியாவின் மற்ற நகரங்களோடு ஒப்பிடுகையில் டெல்லி, ஆள் கடத்தலின் தலைநகராக உருவெடுத்துள்ளது.

தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பக தகவலின்படி, 2015ம் ஆண்டில் டெல்லியில் ஒரு லட்சம் பேருக்கு 37 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இந்த அடிப்படையில் நாட்டிலேயே ஆள் கடத்தலில் டெல்லி முதலிடத்தில் வகிக்கிறது. மேலும், 2015ம் ஆண்டில் டெல்லியில் சுமார் 20,339 வன்முறைக் குற்றங்கள் பதிவாகியுள்ளன. அதைத் தவிர, சுமார் 7,730 ஆள் கடத்தல் வழக்குகளும் பதிவாகியுள்ளன.

மேலும்,உத்தரப் பிரதேசத்தில்,அதிக பட்சமாக சுமார் 11,999 கடத்தல் வழக்குகளும், மகாராஷ்டிராவில் 8,255 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதோடு பிஹாரில் சுமார் 7,128, மத்தியப் பிரதேசத்தில் 6,778, மேற்கு வங்கத்தில் 6,115, அசாமில் 5,831, ராஜஸ்தானில் 5,426, ஹரியானாவில் 3,520, ஒடிசாவில் 3,236 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

பெரும்பாலான சிறுவர்கள் தாங்களாகவே வீட்டை விட்டு வெளியேறி விடுவதால் காணாமல் போன சிறுவர்களை பெற்றோருடன் இணைத்து வைக்க டெல்லி காவல்துறை ‘ஆபரேஷன் மிலாப்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

மேலும், 2015ம் ஆண்டில் இந்தியா முழுவதிலும் சுமார் 82,999 ஆள் கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில், 1,260 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 774 பேர் மிரட்டிப் பணம் பறிப்பதற்காகக் கடத்தப்பட்டுள்ளனர். 18,629 பேர் இதர காரணங்களுக்காக கடத்தப்பட்டுள்ளனர் மற்றும் 31,884 பெண்கள் கட்டாய திருமணத்துக்காகக் கடத்தப்பட்டுள்ளனர்.வழிப்பறி (7,407), கொலை (570), பழிவாங்குதல் (58), கொள்ளை (75), கற்பழிப்பு (2,199), வரதட்சணை கொலை (122), கற்பழிப்பு முயற்சி (46), ஆகிய குற்ற வழக்குகள் ஆள் கடத்தலை தொடர்கிறது என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவலாகும்.

கடத்தல் சம்பவங்களை பெரும்பாலானவர்கள் காவல்நிலைய கவனத்துக்குக் கொண்டு வருவதில்லை. பணத்துக்காகக் கடத்தப்படுவதால், குடும்பத்தினர் இத்தகவலை மறைத்து விடுகின்றனர்.

புதுடெல்லியில் கடத்தல் குற்றங்களைத் தொடர்ந்து கொள்ளை, பலாத்காரம், கொலை, கொலை முயற்சி, தீ வைத்தல், கலவரம், வரதட்சணை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன. ஆனால் அதன் புள்ளி விவரங்களைப் பொறுத்த வரையில் உண்மை வேறாக இருக்கிறது என்று டெல்லி மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், குழந்தைகள் காணாமல் போனதாகப் பெற்றோர் புகார் தெரிவித்தால், அதனை உடனடியாக கடத்தல் வழக்காகப் பதிவு செய்கிறோம்.அதுவே, வயது வந்தோராக இருந்தால் காணாமல் போன பிரிவில் பதிவு செய்கிறோம். ஏனெனில், இவ்விஷயத்தில் தவறான தகவல் காவல்துறைக்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறினார்.

மேலும், புது டெல்லியில் 2015ம் ஆண்டு சுமார் 6,646 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.அவர்களுடைய கடத்தல், காணாமல் போன வழக்குகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளித்துச் செயல்படுகிறோம் என்று அந்தக் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க