• Download mobile app
27 Dec 2024, FridayEdition - 3243
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு பாலாம்பிகை சமேத மாற்றுரைவராதீஸ்வரர் திருக்கோவில்

December 11, 2018 findmytemple.com

சுவாமி : மாற்றுரைவராதீஸ்வரர்.

அம்பாள் : பாலாம்பிகை.

தலச்சிறப்பு :

இது 275 தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். அன்னமா பொய்கையை உருவாக்க கிளி தனது அலகால் தோண்டி உருவாக்கிய குளம் பாலாம்பிகை சன்னிதானத்தின் முன் உள்ளது. இத்தலத்தில் அம்மன் சன்னதி மேற்கு நோக்கி சிவபெருமானை நோக்கி உள்ளது. திருமணம் ஆகாதவர்கள் இவ்வம்மையாரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் வரன் சிறப்பாக அமையும் என்பது பக்தர்கள் கருத்து. தொடர்ந்து 48 நாட்கள் இத்தலத்தில் நடராஜருக்கு அர்ச்சனை செய்வித்தால் தீராத நோய்கள், வயிற்றுவலி, பித்தம், வாதம் போன்ற நோய்கள் நீங்கப் பெறுவர் என்பது ஐதீகம். மாற்றுரைவராதீஸ்வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் இலுப்பை நெய் தீபம் இட்டு வழிபட்டால் பொருளாதார சுவிட்சம் ஏற்படும் என்பது திண்ணம். இக்கோயிலுக்கு முதலாம் இராசராசன், சுந்தரபாண்டியன், முதற் குலோத்துங்கன், கிருஷ்ணதேவராயர் ஆகியோர் திருப்பணிகள் செய்துள்ளது தெரியவருகிறது. கி.பி. 1253-ல் சமயபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ஹொய்சளமன்னனான, வீரசோமேஸ்வரன் காலத்தில் இக்கோயிலுக்கு பதினாயிரம் கலம் நெல் கிடைத்து வந்ததாக கல்வெட்டு மூலம் அறிகிறோம். இதனுடைய ஆதி பெயர் திருப்பாச்சிலாச்சிராமம் பின்னர் மருவி திருவாசி ஆகிற்று. வன்னி மரம் சூழ்ந்த வனத்தில் உள்ளவராதலின் ‘சமீவனேஸ்வரர் ‘ என்று இங்குள்ள இறைவன் அழைக்கப்படுகிறார்.

முதற் கோபுரத்திற்கும் இரண்டாம் பிராகாரத்திற்கும் இடையிலுள்ள மண்டபம் “ஆவுடையாப்பிள்ளை மண்டபம் ” எனப்படுகிறது. இம்மண்டபத்தூணில் சந்பந்தர், கொல்லி மழவன், புதல்வியின் நோயைத் தீர்த்த சிற்பங்கள் அழகாக உள்ளன. சுவாமி சந்நிதியில் சுந்தரருக்கு பொற்கிழி தந்த ஸ்தபன மண்டபம் உள்ளது. இவ்விடத்தைக் கல்வெட்டு “கிழி கொடுத்தருளிய திருவாசல்” என்ற பெயரால் குறிக்கின்றது.

தல வரலாறு :

கொல்லிமலையை ஆண்ட அரசன் பெயர் கொல்லிமழவன் இவரது மகளுக்கு முயலகன் என்ற வயற்றுவலி பற்றிக்கொண்டது. எந்த வித வைத்தியமும் இவளுக்கு பலிக்கவில்லை. உடனே இந்த வயிற்றுவலி நீங்க திருவாசி திருத்தலத்திற்கு வந்து மகளை மனிகண்டேசுவரர் சன்னதி முன்னே படுக்க வைத்தார். அவ்வழியே வந்த திருஞானசம்பந்தர் விவரம் கேட்டறிந்து உணர்ந்தார். எனவே சம்பந்தர் துணிவார் திங்கள் என்ற திருப்பதிகம் தொடங்கி ஒவ்வொரு பாட்டின் இறுதியில் “மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பு” என்று பாடினார். உடன் இறைவன் அருளால் அரசனின் மகள் பிணி நீங்கப் பெற்று சிறிது நேரத்தில் எழுந்தாள். கொல்லிமழவன் மகளின் முயலக நோய் நீக்கிய நடராஜப் பெருமானை பக்தியுடன் இன்றளவும் பக்தர்கள் நோயற்ற வாழ்க்கைக்கு வணங்கி வருகின்றனர்.

வழிபட்டோர் : திருஞானசம்பந்தர், சுந்தரர்.

நடைதிறப்பு : காலை 07.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை. மாலை 05.00 மணி முதல் இரவு 07.45 மணி வரை.

பூஜைவிவரம் :

காலை 08.30 மணி- காலசந்தி,

நண்பகல் 12.00 மணி – உச்சிகாலம்,

மாலை 05.30 மணி – சாயரட்சை,

இரவு 7.30 மணி – அர்த்தசாமம்.

திருவிழாக்கள் :

விநாயகர்சதுர்த்தி,

விஜயதசமி கந்தசஷ்டி,

கார்த்திகைதீபம்,

ஆரூத்ராதரிசனம்,

தைபூசம்,

பிரம்மோற்சவம் வைகாசி பௌர்ணமி முடிவாக புனர்பூசநாளில் கொடியேற்றி பத்தாம் நாளில்

தீர்த்தவாரிக்கு பின்னர் சுவாதி நாளில் திருத்தேர் நடைபெறுவது வழக்கம்.

அருகிலுள்ள நகரம் : திருச்சி.

கோயில்முகவரி : அருள்மிகு பாலாம்பிகை சமேத மாற்றுரை வராதீஸ்வரர் திருக்கோவில்,திருவாசி – 621 216, மண்ணச்சநல்லூர் தாலூகா, திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

மேலும் படிக்க