December 11, 2018
தண்டோரா குழு
காலா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வடமாநிலங்களில் 4 மாதங்களாக விறுவிறுப்பாக நடைப்பெற்றது.
இப்படத்தில், ரஜினியுடன் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
அண்மையில் பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், டிசம்பர் 9ம் தேதி பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நாளை ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பேட்ட படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியிடவுள்ளதாக சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.