December 17, 2018
தண்டோரா குழு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடிப்பில், கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘துப்பாக்கி’. இப்படம் ரசிகர்கள் மத்தியிலும்
வசூல் ரீதியிலும் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படம் விஜய்க்கு ஒரு திருப்பு முனையாகவே இருந்தது. அதன்பின் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் கத்தி, சர்கார் என இரு படங்கள் வெளியாகின இப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கிடையில், துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “கண்டிப்பாக துப்பாக்கி 2 திரைப்படம் உருவாகும். அது துப்பாக்கி படத்தை போல பல மடங்கு விறுவிறுப்பாக இருக்கும்” என்றும், “ரஜினி படத்தையும் இயக்க உள்ளேன். அது நிச்சயம் அரசியல் படமாக இருக்காது. ரசிகர்களை திருப்திபடுத்தும் மாஸ் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளார்கள்.