December 19, 2018
தண்டோரா குழு
நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
96 படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் நாளை வெளியாகவுள்ள படம் சீதக்காதி. இப்படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரனிதரன் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியின் 25வது படமான இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் வள்ளல் சீதக்காதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கலாம் என புகார் தெரிவித்து கீழக்கரையைச் சேர்ந்த முகமது சலையா உசேன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையடுத்து, படம் நாளை வெளியாக உள்ள நிலையில் வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.