சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் ஃபலூடா என்றால் ருசிக்காமல் விட மாட்டார்கள்.
ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள்:
பால் – 1கப்
ஓரம் நீக்கப்பட்ட பிரட் – 3
சர்க்கரை – 1/2 கப்
எசன்ஸ் -1 தேக்கரண்டி
ஃபலூடா செய்ய தேவையான பொருட்கள்:
வேகவைத்த சேமியா – 1கப்
ஜெல்லி – 1கப்
நறுக்கிய பழங்கள் (ஆப்பிள், திராட்சை, பப்பாளி, வாழைப்பழம்)
செர்ரி பழம் – 3
செய்முறை:
முதலில் பாலை நன்கு சுண்ட காய்த்து கொள்ள வேண்டும்.அதில் பிரட் துண்டுகளை போட்டு சிறிது நேரம் அப்டியே வைத்து விட வேண்டாம். பால் ஆறியதும் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அந்த கலவையை ஒரு 4-மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும்
பிறகு அந்த ஐஸ்கிரீம் கலவையில் எசன்ஸ் ஊற்றி மிக்ஸியில் போட்டு அடித்து விட வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் மாற்றி 5-மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.
ஒரு நீளமான கண்ணாடி டம்பளரில் முதலில் வேகவைத்த சேமியா போடவும். பின்பு மேல் குறிப்பிட்ட அணைத்து பழங்களும் ஒன்றன் பின் ஒன்றாக போடவும். கடைசியாக அதில் மேல் ஐஸ்கிரீம், செர்ரிபழம், ஜெல்லி வைத்து ருசி பார்க்கவும். சுவை மிகுந்த ஃபலூடா ஐஸ்கிரீம் தயார்.
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது
ஈஷாவில் நிறைவுபெற்ற பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி!
16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு : மாநில அளவிலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் துவங்கியது
கோவையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு பிராண்ட் கோயம்புத்தூர் தூதுவர் விருது