September 16, 2016 தண்டோரா குழு
தங்களது உயிரை விட தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட நோயாளியின் உயிர் உயர்ந்தது என்ற எண்ணத்தோடு கடமையாற்றிய கர்நாடகா மருத்துவர்களின் அர்ப்பணிப்பு ,மருத்துவர்கள் கடவுளின் பிரிதிநிதிகள் என்பது மிகையல்ல என்பதை உணர்த்தியுள்ளது.
55 வயது நோயாளி ஒருவர் கல்லீரல் சேதமடைந்த காரணத்தால் ,மாற்றுக் கல்லீரலுக்காகக் கடந்த 2 வருடங்களாக கர்நாடகாவின் மணிப்பால் மருத்துவமனையில் காத்துக்கொண்டிருந்தார்.மூளைச் சாவடைந்த நபர்களின் உறுப்புக்களை மட்டுமே கொடையாகப் பெறமுடியும். அவ்விதம் தமிழ்நாட்டில் சேலத்தில் உள்ள ஒரு நோயாளியின் கல்லீரலைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச்சமயத்தில் காவேரி விவகாரம் பூதாகாரமாக உருவெடுத்தது.கர்நாடகா எல்லையைத் தாண்ட மக்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தனர்.தடை உத்தரவை விட நோயாளியின் உயிரைக் காப்பதே பிரதானம் என்ற முடிவோடு கல்லீரல் நோய் மருத்துவ ஆலோசகரான Dr.A.ஒலித்செல்வன் தலைமையில் ஒரு குழு தமிழ்நாடு வந்தது.மற்றுமொரு காரணம் என்னவெனில் கொடையாளியின் விருப்பமும் வீணாகிவிடும் என்பதாகும்.
அவர்களது பயணத்தைப் பற்றி Dr A ஒலித்செல்வன் விவரிக்கையில் அவர்களது 4மணி நேரப்பயணம் முடிவுறாத நீண்டபயணமாக இருந்தது என்றார்.பெங்களூரிலிருந்து புதன் கிழமை இரவு அதாவது வியாழக்கிழமை விடியற்காலை புறப்பட்டுள்ளனர். தமிழ்நாடு எல்லைவரை கர்நாடகாவின் பதிவு எண் கொண்ட வண்டியில் நோயாளி பிரயாணம் செய்துள்ளனர்.
அதன் பின் நோயாளியைச் சக்கர நாற்காலியில் அமர வைத்து இருட்டையும் பொருட்படுத்தாது,உயிரையும் பணையம் வைத்து கால் நடையாக 30 நிமிடங்கள் நடந்து பின் தங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு ஆம்புலன்ஸ்ல் பயணித்து மருத்துமனையை அடைந்துள்ளனர்.அந்த 30 நிமிடப் பயணம் தங்களது
வாழ்க்கையில் மிகநீண்ட பயணமாக இருந்தது என்றும் தெரிவித்தார்.
அதன் பின் 12 மணி நேர அறுவை சிகிச்சை செய்து நோயாளியைக் காப்பாற்றியுள்ளனர்.இரு மாநிலங்களுக்கிடையே இருந்த பதட்டத்தைக் காரணம் காட்டி, இம்முயற்சி எடுக்காமலிருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருக்க முடியாது, மேலும் கொடையாளியின் விருப்பத்தையும் நிறைவேற்றியிருக்கமுடியாது என்று
Dr.A.ஒலித் செல்வன் தெரிவித்தார்.
இவர்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு முன்பு தாங்கள் மேற்கொண்ட ஆபத்து மிகச் சிறியவையே என்றார்.