• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

” அம்மா திருமண மண்டபம் ” முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

September 17, 2016 தண்டோரா குழு

சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருவள்ளூர், திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் “அம்மா திருமண மண்டபம்” கட்டப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

83 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ‘அம்மா திருமண மண்டபம்’ கட்டப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஏழை எளிய மக்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்த வாடகையாக அதிகம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ” அம்மா திருமண மண்டபங்கள் ” கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மண்டபங்களில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஒப்பனை அறை, மணமகன் மற்றும் மணமகளுக்கான தனி அறைகள், விருந்தினர்களுக்கான அறைகள், விருந்து உண்ணும் அறை, சமையல் கூடம் என அனைத்து வசதிகளும் இருக்கும். மேலும், இந்தத் திட்டம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் ஆகியவை மூலம் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.

இத்திட்டமானது, தண்டையார்பேட்டை, வேளச்சேரி, அய்யப்பாக்கம், பருத்திப்பட்டு, பெரியார் நகர், கொரட்டூர், மதுரை மாவட்டத்தில் அண்ணாநகர், திருநெல்வேலி மாவட்டத்தில் அண்பாசமுத்திரம், சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் கொடுங்கையூர், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை ஆகிய 11 இடங்களில் 83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

இந்த திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும். இதன் மூலம், அனைத்து தரப்பு மக்களும் குறைந்த வாடகையில் தங்களது சுப நிகழ்ச்சிகளை நடத்த உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் சோழிங்கநல்லூரில் 1,500 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில் 2,000 குறைந்த வருவாய்ப் பிரிவு, மத்திய வருவாய்ப் பிரிவு,உயர் வருவாய்ப் பிரிவு குடியிருப்புகளை கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.இவை 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

இத்திட்டத்தின் கீழ், குறைந்த வருவாய்ப் பிரிவு வீடுகளின் விலை 20 லட்சம் ரூபாய்க்கு கீழ் நிர்ணயிக்கப்படும்.ஒரு வரவேற்பறை, இரு படுக்கையறைகள் மற்றும் ஒரு சமையலறை கொண்டதாக இவை கட்டப்படும். வீட்டின் பரப்பளவு 645 சதுர அடியாக இருக்கும்.

மத்திய வருவாய் பிரிவினருக்கான வீடுகள் விலை 30 லட்சம் ரூபாய்க்கு குறைவாக நிர்ணயிக்கப்படும். இவை 807 சதுர அடி பரப்பளவு உள்ளதாக இருக்கும். நடப்பாண்டில் பல்வேறு தரப்பு மக்களின் வீட்டுவசதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, 256 கோடியே 34 லட்சண் ரூபாய் செலவில், சுயநிதி திட்டத்தின் கீழ் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 873 குடியிருப்புகள் கட்டும் திட்டத்தினை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் செயல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க