January 14, 2019
தண்டோரா குழு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அட்லீ இயக்கதில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.
இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் பரியேரும் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கதிர், காமெடி நடிகர் யோகி பாபு ஆகியோர் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை அண்மையில் துவங்கியது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விவேக்கும் இனைதுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜயுடன் ஏற்கனவே பல வெற்றிப் படங்களில் விவேக் சேர்ந்து நடித்துள்ளார். அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, விஜய் 63 படத்தில் விவேக் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.