January 14, 2019
தண்டோரா குழு
செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மஹத், மேஹா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் அஜித்தின் விசுவாசம், ரஜினியின் பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் படம் பொங்கல் ரேசில் இருந்து படம் விலகியது.
இந்நிலையில் தற்போது இப்படம் பிப்ரவரி 1ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.