January 24, 2019 www.findmytemple.com
சுவாமி : அருள்மிகு கனக துர்கா.
தலச்சிறப்பு : கனக துர்கா அம்மனை வழிபடும்போது, பழங்களால் அபிஷேகம் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும். வாழைப்பழ அபிஷேகம் செய்தால் சாகுபடி செய்த பயிர்கள் நல்ல மகசூல் தரும். பலாப்பழ அபிஷேகம் செய்தால்… நினைத்தது நடக்கும். மாம்பழ அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். மாதுளம்பழ அபிஷேகம் செய்தால் கோபம் தீரும். எலுமிச்சம்பழம் அபிஷேகம் செய்தால் பகைவர் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.
‘எங்கும் நிறைந்த பரம்பொருளை, தீபச் சுடராகக் கண்டு வழிபடுவதால், வாழ்வில் துன்ப இருளை அகற்றி இன்ப ஒளி ஏற்றலாம்’ என்பது சான்றோர் கருத்துப்படி நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பமுடன் வாழ கனக துர்கா அம்மன் அருள் புரிவாள் என்பது நம்பிக்கை.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.