September 19, 2016 தண்டோரா குழு
பீகார் மாநிலத்திலுள்ள ஔரங்காபாத் மாவட்டத்தில்,சட்டமன்ற உறுப்பினரான பிரேந்திரா சின்ஹாவின் மகனான குனல்ப்ரதாப் என்பவர் 26 வயதான பின்டு குமாரைத் தாக்கியதால் கைது செய்யப்பட்டார்.
பிரேந்திரா சின்ஹா,லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தல் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்.இவரது மகன் குனல்ப்ரதாப்.வெள்ளிக் கிழமையன்று ஒப்ரா பகுதியில் இவரது கார் சென்று கொண்டிருக்கும் போது பின்டு குமார் என்பவர் குனல்பிரதாப்ன் காரை முந்திச் சென்றுள்ளார்.
அதை பொறுத்துக் கொள்ள முடியாத குனல்பிரதாப் தனது வண்டியை நிறுத்தி முதலில் தள்ளிவிட்டதாகவும்,பின்பு குத்தியதாகவும் பின்டு கூறியுள்ளார்.குனல் தன்னிடம் அவரது கட்டளைக்கு அடிபணியும் படி கூறியதைத் தான் மறுத்ததால் தன்னைத் தாக்கியதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் குனலின் தந்தை இந்த குற்றச் சாட்டை மறுத்துள்ளார்.பிண்டு குமார் குற்றப்பின்னணி உடையவர் என்றும் ,தனது மகனின் காரை முந்தியதற்கு அவரைக் கொல்லும் நோக்கமும் இருக்கலாம் என்றும்,சண்டை நடந்திருக்கலாம்,ஆனால் கத்தியால் குத்துவது சாத்தியமில்லை,ஏனெனில் பல ஊழியர்கள் அவ்விடத்தில் சாட்சிகளாக இருந்துள்ளனர் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதே போல் போன மாதம் சட்டிஸ்காரில் ஒரு அரசியில் வாதியின் மகன் இரண்டு வண்டியோட்டிகளை அடித்தது குறிப்பிடத்தக்கது.தாங்கள் வீதியில் செல்லும் போது எந்த வண்டியும் தங்களை முந்தவும் கூடாது,வண்டிகள் அனைத்தும் தங்களுக்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டும் என்ற மனப்பான்மை அரசியல் வாதிகளுக்கு மட்டுமின்றி அவர்களது வாரிசுகளுக்கும் அமைந்திருப்பது துரதிருஷ்டமே.