• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய குட்டி விமானம்

September 19, 2016 தண்டோரா குழு

அமெரிக்காவில் வீட்டின் மீது குட்டி விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி உள்பட 6 பேர் அதிர்ஷ்ட்ட வசமாக உயிர் தப்பினர்.

அமெரிக்காவின் அரிசோனாவில் இருந்து ஒரு குட்டி விமானம் புறப்பட்டு சென்றது.அதில் விமானியும், 4 பாராசூட் வீரர்களும் இருந்தனர். அவர்கள் அமெரிக்க அரசியலமைப்பு சட்ட ஆண்டு விழாவையொட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்க புறப்பட்டு சென்றனர். அந்த விமானம் போனிஸ் நகரின் மீது பறந்த போது ஒரு வீட்டின் மீது திடீரென விழுந்து நெறுங்கியது. இதனால் அப்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.

அந்த விபத்தின் தகவலை அறிந்த கில்பர்ட் பகுதியில் இருந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அந்த திடீர் விபத்தில் விமானிக்கு கடும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அந்த விமானியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விமானத்தில் பயணம் செய்த மற்ற 4 பாராசூட் வீரர்களும் விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர்.

இந்நிலையில், அந்த விமானம் விழுந்து நெறுங்கிய வீடு முழுவதும் இடிந்து விழுந்தது.அவ்வீட்டில் வசித்து வந்த தம்பதியினர் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தனர். அவர்களை உயிருடன் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போனிக்ஸ் நகரின் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மேலும் இதுக்குறித்து அந்த வீட்டின் உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

மேலும் படிக்க