September 20, 2016 தண்டோரா குழு
ஈபிள் கோபுரத்தின் கீழ் இளம்பெண் ஒருவரை 3பேர் கொடூரமாக கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் ஏழு அதிசயங்களில் ஈபிள் கோபுரமும் ஒன்று, அதை பார்க்க உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆண்டுதோறும் அங்கு வருகை தருகின்றனர். இந்த புகழ்ப்பெற்ற சின்னம் பிரான்ஸ் நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றது.
பாரீஸ் நகரில் பெயர் வெளியிடப்படாத 19 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் 17 வயதான அல்ஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவருடன் அவர் பழகி வந்துள்ளார். இந்நிலையில், பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் கீழ் சந்திக்கலாம் என அந்த வாலிபர் அப்பெண்ணை அழைத்துள்ளார்.நடக்கவிருக்கும் விபரீதத்தை அறியாத அவரும் அந்த வாலிபர் அழைத்த இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, அந்த வாலிபர் மற்றும் மறைந்திருந்த மற்ற இருவர் என மூவரும் சேர்ந்து அப்பெண்ணை கட்டி தூக்கிச் சென்றுள்ளனர். ஈபுள் கோபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு புதரில் அவர்கள் ஏற்கனவே போர்வை போன்ற ஒரு ஆடையை தயாராக வைத்துள்ளனர். பின்னர், பெண்ணின் வாயை துணியால் கட்டிய அவர்கள் மூவரும் கூட்டாக அப்பெண்ணை கற்பழித்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு பிறகு அந்த இளம் பெண் மயக்கமாகியுள்ளார். மறுநாள் அதிகாலையில் நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
கற்பழிப்பு தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய அவர்கள், கணினி தரவை பயன்படுத்தி பாரீஸில் உள்ள 18வது வட்டத்தில் மூவரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும், மூவரும் ஜெர்மனி நாட்டிற்கு தப்புவதற்கு தயாராக இருந்ததும், அவர்கள் மூவரிடமும் சட்டப்பூர்வமான ஆவணங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.
அம்மூவரும் யார், பிரான்ஸ் நாட்டில் என்ன செய்கிறார்கள் என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் தங்கள் மேல் செலுத்தியுள்ள குற்றச்சாட்டு தவறு என்றும், அவர்கள் அப்பெண்ணின் சம்மதத்துடன் தான் உறவு வைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
அம்மூவரையும் சிறையில் அடைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணை தற்போது சமூக சேவை பாதுகாப்பின் கீழ் பத்திரமாக உள்ளார்.