• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகிஸ்தானுடன் போர் நமக்கு நன்மை பயக்குமா?

September 20, 2016 தண்டோரா குழு

காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. கடந்த ஞாயிறன்று பாகிஸ்தான் உதவியோடு தீவிரவாதிகள், பேடிகள் போல், மக்கள் உறங்கும் வேளையில் காஷ்மீரில் உள்ள ராணுவ முகாமைத் தாக்கியதில் 20அதிகாரிகள் இறந்த சம்பவம் ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் நெருப்புக்கனலை எழுப்பியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக போர் எழுப்ப வேண்டும் என பல மூலைகளிலிருந்தும் ,மக்கள் அரசை வற்புறுத்தத் தொடங்கியுள்ளனர். ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு விமர்சனங்களை அள்ளித் தெளித்தவண்ணம் உள்ளன.

இந்தியா அணுஆயுதத்தில் பாகிஸ்தானைவிட சக்தி வாய்ந்த நாடு என்பதில் ஐயமில்லை. பாகிஸ்தானின் ஒரு தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டையையே தரைமட்டமாக்கும் வல்லமை பெற்றது என்பதிலும் சந்தேகமில்லை.

ஆனால் போரின் மூலம் நமது இழப்பு என்ன என்பதை நாம் கணக்கெடுக்க வேண்டியது அவசியமாகிறது. விஞ்ஞானம் இத்தகைய பரிணாமத்தை எட்டுமுன்னரே,1945ம் ஆண்டு அமெரிக்காவால் ஹிரோஷிமா,நாகசாகியில் போடப்பட்ட அணு குண்டுகளால் 70ஆண்டுகள் ஆகியும் பின்பு அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை என்பதை சரித்திரம் கூறுகிறது.நிலங்கள் விளைச்சலுக்கு ஏற்றவையாக இல்லை, பல தலைமுறைகளாக மக்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் உணர்ச்சிபூர்வமாக முடிவெடுப்பதற்கு முன் அணுஆயதப் போரால் ஏற்படும் பின்விளைவுகளை சிறிது பார்ப்போம்.

அணுகுண்டு வெடித்தவுடன் முதலில் தீவிரமான ஒளிப் பிழம்பு காணப்படும்.அதைத் தொடர்ந்து நெருப்புப் பந்துகளாக உருவெடுக்கும். இந்நெருப்பு காணும் அனைத்தையும் எரித்துவிடும்.இதன் வெப்பம் பல மைல்கள் பரவ வல்லது.

இவை மேல் எழும்பும்போது மலைகள்,கற்கள், இடிந்த பொருட்கள்,ஆகிய அனைத்தையும் சிறு துண்டுகளாக்கி வீசும்.இதனுடைய தீவிர வெப்ப சக்தி ,காற்றை உஷ்ணப்படுத்துவதால் ஒரு விதமான அதிர்ச்சி அலை உருவாகும்.இந்த உஷ்ண அலை திண்காரைக் கட்டிடங்களையும், வாகனங்களையும் கூட தூக்கி வீச வல்லது.

குண்டு வெடித்தபின்பு தீப்பிழம்பு உருவாகி மேலெழுந்த வண்ணம் இருக்கும்.இவைகளிலிருந்து வெளிப்படும் கதிரியக்கத் துகள்கள் பல தூரம் காற்றில் பரவி பூமியின் காற்று மண்டலத்தையே பாழடித்துவிடும்.கதிரியக்கத் துகள்கள் நிறைந்த காற்றைச் சுவாசிப்பதன் மூலம் அனைத்து உயிரினங்களும் பலவிதமான இன்னலுக்கு உள்ளாவர்.

இக்காற்று சுத்தமாவதற்கு பலப்பல ஆண்டுகள் பிடிக்குமாகையால் நமது சந்ததியரும் பாதிக்கப்படுவர்.தீங்கிழைக்கவல்ல அல்டிரா வைலட் கதிர் வீச்சும் பூமியை ஆக்கிரமிக்கும். இவைகளின் பொருட்டு மழை வரத்து பெரிதும் பாதிக்கப்படும்.

சீதோஷ்ண நிலைமாற்றத்தாலும், இயற்கையான சூரிய வெப்பமின்மையாலும்,நிலங்கள் மாசுபட்டமையாலும் விளைபொருளின்றி, உண்ண உணவின்றி மக்கள் பட்டினியால் மாள நேரிடும்.இந்நிலை மற்ற தலைமுறைக்கும் நீடிக்கலாம்.

சுற்றுப் புறச் சூழ்நிலை மட்டுமின்றி நாம் பொருளாதார வகையிலும் பாதிக்கப்படுவது நிச்சயம். காலமும்,பொருளும் செலவிட்டுப் பெருக்கிய கட்டமைப்புகளும், ஆலைகளும்,அணைகளும் இன்ன பிற நாட்டிற்குத் தேவையான பலவும் அழிக்கப்பட்டு விடுமேயானால், மீண்டெழ காலம் அதிகம் ஆகும்.

நீயூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் கணிப்பின்படி இந்தியா பாகிஸ்தானுக்கிடையே போர் மூளுமானால் குறைந்தது 12 மில்லியன் மக்கள் உடனே மாள்வர்.அதன் பின் இப்போரின் தாக்கம் அடுத்த 20 வருடம் நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

இப்போரை நடத்த நாம் நிச்சயித்தோமானால் பாகிஸ்தான் வரைபடத்தில் இருந்து காணாமல் போவது உறுதி,ஆனால் நமது இழப்பிற்கு விடை என்ன?

மேலும் படிக்க