September 20, 2016
தண்டோரா குழு
தமிழகத்தின் வேலூர், மதுரை, தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகியவை மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றப்பிறகு நாடு முழுவதும் பல்வேறு வசதிகள் கொண்ட ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக சென்னை உட்பட 20நகரங்கள் கொண்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலை கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.பின்னர்
2-வது பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தமிழக நகரங்கள் இடம்பெறவில்லை.
இந்நிலையில் இன்று ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்றப்பட உள்ள 27நகரங்களின் பெயர் பட்டியலை மத்திய நகர மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார்.
இதில் தமிழகத்தின் வேலூர், தஞ்சாவூர், மதுரை, சேலம் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், மகாராஷ்டிராவில் 5 நகரங்கள், தமிழகம், கர்நாடகாவில் 4 நகரங்கள், உத்தரப்பிரதேசத்தின் 3, பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தின் தலா 2 நகரங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மேலும், சுமார் 60 நகரங்களை இந்த ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அதற்கு சுமார் 1,44,742 கோடி ரூபாயை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.