September 20, 2016 தண்டோரா குழு
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவைக் கண்டித்து நாளை கர்நாடகா மாநிலத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது.
காவிரி விவகாரம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையில், நான்கு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். மேலும் நாளை முதல் வரும் 27ம் தேதி வரை தமிழகத்திற்கு 6000 கன அடி நீர் காவிரியிலிருந்து வழங்க வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.
இதையெடுத்து, உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணையை கண்டித்து கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்ள் அறிவித்துள்ளது.
காவிரியிலிருந்து 15000 கன அடி நீர் திறந்து விடக்கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் கடந்த வாரம் கர்நாடக முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது.மேலும் தமிழ வாகனங்கள் அனைத்தும் தீயிட்டு கொளுத்தியும், தமிழர்களும் தாக்கபட்டனர்.
இந்நிலையில் நாளை மீண்டும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்திருப்பதால் கர்நாடகா மற்றும் தமிழக எல்லை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது. தற்போது ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றும் வருகிறது.