September 22, 2016 தண்டோரா குழு
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.
உலக அளவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலை பிரபல அமெரிக்க வர்த்தக பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டது. கடந்த 21 ஆண்டுகளாக பணக்காரர்களை பட்டியலிடும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையில், 8-வது முறையாக முதல் இடத்தை முகேஷ் அம்பானி தக்கவைத்துள்ளார்.
முகேஷ் அம்பானியின் சொத்து சொத்து மதிப்பு ரூ.15 லட்சம் கோடி என்றும்,கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் சொத்து ரூ.12 லட்சம் கோடியாக இருந்ததும்,கடந்த 12 மாதங்களில் அவரது சொத்து 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மருந்து பொருட்கள் உற்பத்தி துறையில் சாதனை படைத்து வரும் திலிப் சங்வி 2-வது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து ரூ.11 லட்சம் கோடி.
3-வது இடத்தில் இந்துஜா சகோதர்களும் (ரூ.10.1 லட்சம் கோடி), 4-வது இடத்தில் அசிம் பிரேம்ஜி (ரூ.10 லட்சம் கோடி), 5-வது இடத்தில் பல்லோன்ஜி பிஸ்திரி (ரூ.9.31 லட்சம் கோடி), 6-வது இடத்தில் லட்சுமி மிட்டல் (ரூ.8.37 லட்சம் கோடி), 7-வது இடத்தில் கோத்ராஜ் குடும்பம் (ரூ.8.31 லட்சம் கோடி), 8-வது இடத்தில் ஷிவ் நாடார் (ரூ.7.64 லட்சம் கோடி), 9-வது இடத்தில் குமார் பிர்லா (ரூ.5.89 லட்சம் கோடி), 10-வது இடத்தில் சைரஸ் பூனவாலா (ரூ.5.76 லட்சம் கோடி) ஆகியோர் உள்ளனர்.