March 1, 2019 www.findmytemple.com
சுவாமி : விஜயசனபெருமாள்.
அம்பாள் : வரகுணவல்லித்தாயர், வரகுண மங்கைத் தாயர்.
தீர்த்தம் : அக்னி தீர்த்தம், தேவ புஷ்கரணி.
விமானம் : விஜயகோடி.
தல வரலாறு : முன்னோரு காலத்தில் ரேவா நதிக்கரையில் புன்னிய கோஷம் என்னும் அக்கிராகாரத்தில் “வேதவி” என்பவர் தன் மாதா, பிதா, குரு மூவருக்குரிய கடன்களை முடித்து திருமாலை நோக்கி ஆஸனதை என்னும் மந்திரத்தை ஜெபித்து தவமிருக்க எண்ணியிருக்கையில் அவனிடம் திருமால் கீழ் பிராமண வேடத்தில் வந்து ஆஸனதை மந்திரம் ஜெபிக்க வரணகுண மங்கை தான் சிறந்தது என்று கூற அவர் இங்கு வந்து கடுந்தவம் செய்து திருமாலின் அருள் பெற்று பரமபதம் அடைந்தார். ஆஸன மந்திரம் ஜெபித்து இறைவன் காட்சியளித்த இடமாதலால் “விஜயசானர்” என்னும் திருநாமம் திருமாலுக்கு உண்டானது.
பிரம்மாவின் கர்வத்தை அழித்த ரோமேச மகரிஷிக்கும் சத்தியத்தால் கணவனின் உயிர் மீட்ட பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியான சாவித்திரிக்கும் அதர்மத்தையும், அக்கிரமத்தையும் சுட்டுப் பொசுக்கும் அக்கினி தேவனுக்கு காட்சியளித்த இடம், இம்மூவருக்கும் சத்தியத்திற்கு ஜெயம் அளிப்பவனாக, சத்திய நாராயணனாக ஆதிசேடன் குடைபிடிக்க சத்தி ஜெயவிஜயங்களை தன் ஆசனமாகக் கொண்டு விஜயாசனர் என்னும் திருநாமம் பெற்று வீற்றிருந்த திருக்கோலத்தில் பரமபத சேவை தந்தருளும் தலம். இத்திருப்பதியில் உயிர் நீத்தால் மோட்சம் கிட்டும் என ரோமேச முனிவர் கூறியுள்ளார்.
நடைதிறப்பு : காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, நண்பகல் 1.00 மணி முதல் 6.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : திருநெல்வேலி.
கோயில் முகவரி : அருள்மிகு விஜயசன பெருமாள் திருக்கோவில்,
நந்தம், தூத்துக்குடி மாவட்டம்.