கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியான படம் தேவி. இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இதனைத்தொடர்ந்து தேவி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஏ.எல்.விஜய் முடிவு செய்தார். இதையடுத்து, கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘தேவி 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இப்படத்தில் பிரபுதேவா, தமன்னா, நந்திதா, கோவை சர்ளா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ், யோகிபாபு, குருசோமசுந்தரம், நாசர், சோனுசூட் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு கோபிசுந்தர் இசையமைத்துள்ளார்.
இதற்கிடையில், சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த இயக்குனர் விஜய், ஒருபக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியையும் இன்னொரு பக்கம் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பையும் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது ‘தேவி 2’ படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 12 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், இந்தி என இரு மொழிகளில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூரில் பிரத்யேக வைர மற்றும் தங்க ஆபரண ஷோரூமை க்ளோ பை கீர்த்திலால்ஸ் தொடங்கியுள்ளது
கோவை டிரினிட்டி கண் மருத்துவமனையில் அதிநவீன கான்டோரா லாசிக் அறுவை சிகிச்சை அறிமுகம்
தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் தமிழகத்திலும் கேரளாவிலும் ப்யூர் பவர் அறிமுகம்
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்