September 24, 2016 தண்டோரா குழு
சென்ட்ரல் பார்க்கை பிரடெரிக் லா ஓம்ஸ்டெட் மற்றும் கால்வெர்ட் வாக்ஸ் என்பவர்களால் வடிவமைக்கப்பட்டு 1860ம் ஆண்டு ஒரு இயற்கை அமைப்பை போல் கட்டப்பட்டது. அப்பகுதியில் நீர்வீழ்ச்சிகள், மரங்கள், குளங்கள், மற்றும் பாறைகள் எப்போதும் அங்கு இருந்திருந்தது போலவே அமைத்தனர்.
வனப்பகுதி மிகுந்த பகுதிகளில் ஒன்று ராம்பிள் என்று அழைக்கப்படும் இடமாகும். 30க்கும் மேற்பட்ட மரங்கள், பாதைகள், மற்றும் தோட்டங்கள்,பார்வையாளர்களை தங்கள் பரப்பரப்பான நகர வாழ்கையில் இருந்து முற்றிலும் மாறுப்பட்ட அற்புதமான இயற்கையை கண்டு ரசிக்கும் ஒரு இடமாக அது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்டட் அந்த இடத்தை “ஒரு காட்டு தோட்டம்” என்றே கருதினார். ஆனால் அங்கு காணப்படும் பாறைப்படுக்கையானது, அதன் அடித்தளம், பிரபலமான இயற்கை கட்டிடகலைஞரால் புனையப்பட்டது.
ஆம்ஸ்டட் மற்றும் வாக்ஸ் தாங்கள் நினைத்த திட்டத்தை அங்கே செயல்பபடுத்த ஆரம்பித்தனர். அங்கு ஒரு சிறிய, குறுகிய குகையை, மனிதர்களின் உதவியை கொண்டு அப்பகுதியில் செதுக்கப்பட்ட சித்திரங்களை, வேலையாட்கள் அந்த இடத்தை தோண்டியெடுத்த போது கண்டுப்பிடித்தனர்.
பூர்வீக அமெரிக்கர்கள் அந்த குகையை பயன்ப்படுத்தினர் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு அவர்கள் கூறுவதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. என்றாலும், தங்குமிடத்திற்கான சுவற்றில் உள்ள சிறிய பிளவுகளை பயன்படுத்தப்படுத்த வேண்டும் என்று அதை அவர்கள் மிக உன்னிப்பாக திட்டமிட்டிருந்தார்கள். இயற்கை கலவைக்கு உதவ பெரிய பாறைகள் அவர்கள் இயற்கையாக அங்கு குடியேறியது போல் இருக்க குகைகளை சுற்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.
அங்குள்ள ரகசிய அறைக்கு செல்ல அவர்கள் தட்டையான கற்களை கொண்டு மாடி படிக்கட்டுகளை கட்டினர். துணிச்சலான படகு ஓட்டுபவர்களை அந்த இடத்திற்குள் அனுமதிக்க மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரி மாற்றப்பட்டது.
நீங்கள் கற்பனை செய்தது போல, அமெரிக்க பிரபல துணிச்சல் மிக்க கதைகளில் “டாம் சாயர்” கதையும் ஒன்று. இது போன்ற குகைகள் குழந்தைகளுக்கு ஒரு பெரிய வெற்றியாக இருந்தது. தங்களுடைய பரப்பரப்பான அலுவலக வேளைகளில் இருந்து கொஞ்சம் தனிமையான நேரத்தை செலவிட விரும்பும் தம்பதியினருக்கு இந்த வகை குகைகள் நிம்மதியும் சந்தோசத்தையும் தரும் இடமாக இருக்கிறது.
ஆனால், குகைகளில் கொடிய செயல்கள் நடக்க துவங்கியது.1904ம் ஆண்டில், ஒரு மனிதன் அந்த குகையில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக நம்பப்படுகிறது. உண்மையில் அது தற்கொலை இல்லை மாறாக அது ஒரு கொலை முயற்சி என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால், அங்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் சரியாக தெரியாது. அதே போல், 1922ம் ஆண்டில், கலைஞர் அலெக்சாண்டர் மெக்கார்தர் என்பவர் குகையினுள் ஒருவரிடம் தவறாக நடந்துக் கொண்டதால், ஆதரவற்றவர்கள் இல்லத்தில் மூன்று மாதங்கள் பணிபுரிய வேண்டும் என்ற தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. மேலும் 1929 ல்,பெண்களை அதிகமாக எரிச்சலூட்டும் செயல்களை செய்ததால் 335 மனிதர்கள் “சென்ட்ரல் பார்க்கில்” இருந்து கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற தவறுகள் நடக்க இந்த ராம்பிள் குகை பயன்ப்படுதப்பட்டது.
இதுபோன்ற புகார்கள் வருவதை கண்ட அப்பூங்காவின் அதிகாரிகள், 1920களில் அந்த குகையை மூடி சீல் வைத்தனர். அந்த குகைக்கு உள்ளே இனி செல்ல முடியாததால், ராம்பிள் ஸ்டோன் ஆர்க்கின் கிழக்கே உள்ள பழைய கல் படிகள் கண்டறிந்து அக்குகைகுள்ளே செல்ல முடியும் என்ற நம்பிக்கையில் துணிச்சலான கண்டுபிடிப்பாளர்கள் அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளனர்.