September 24, 2016 தண்டோரா குழு
கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே நிசார் என்பவருக்கு சொந்தமான செருப்பு கடையில், நேற்று நடைபெற்ற கலவரத்தில் தீ வைக்கப்பட்டது. அதில் சுமார் 17 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து நிசார் கூறுகையில் கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கொலை செய்யப்பட்டு கோவையில் பதற்ற நிலை உருவானது. இந்து அமைப்புகள் பந்த் அறிவித்திருந்தது .
இதனை அடுத்து கோவை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. அதனால் நானும் எனது கடையே அடைத்து தான் வைத்திருந்தேன். சசிகுமாரின் உடல் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட பொழுது துடியலூரில் கலவரம் வெடித்தது. இதில் பூட்டிய எனது கடையின் அடிப்பாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. தீயில் எரிந்து நாசமான பொருட்களின் மதிப்பு 17 லட்சம் ஆகும். அதற்க்கு காப்பீட்டு தொகையும் செய்யப்பட்டவில்லை . இந்த நஷ்டத்தை என்னால் ஈடுகட்டவே முடியாது. தமிழக அரசாங்கம் நிதி தந்தால் மட்டுமே இதிலிருந்து மீள முடியும் என தெரிவித்தார்.
அதே போல் அருகில் உள்ள தொலைபேசி விற்கும் கடையின் பூட்டை உடைத்து தொலைபேசிகளையும் மர்ம கும்பல் கொலை அடித்து சென்றவிட்டது.இதே போல் கலவரத்தில் சேதமடைந்த கடைகளுக்கு அரசாங்கம் நிதி வழங்க வேண்டும் என கடை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.