• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையைச் சேர்ந்த இளைஞர் அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

March 22, 2016 வெங்கி சதீஷ்

தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நேரடி பிரச்சாரங்கள் மற்றும் விமர்சனங்களை விடச் சமூக வலைத்தளங்களின் ஆதிக்க அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அதற்கு அச்சாரமாகக் கடந்த இரு மாதங்களாகவே பிரதான எதிர்க்கட்சியான தி.மு.கவினர் தங்களது பிரச்சாரங்களை துவங்கியுள்ளனர்.

மேலும் அ.தி.மு.க பற்றிய பல்வேறு குற்றச்சாட்டுகளையும் தி.மு.கவினர் கூறி வருகின்றனர். அவை அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இவற்றைச் சமாளிக்க அ.தி.மு.கவினர் பதிலடி கொடுத்தாலும் இதுவரை சரியான பதிலடியாக எதுவும் அமையவில்லை. பழைய பல்லவியையே பாடி வருகின்றனர். இதனால் போதிய அளவு வரவேற்பு இல்லை. இதனால் புதிய முறையில் பிரச்சாரம் செய்யவும், எதிரணியின் உத்திகளை முறியடிக்கவும் புதிய ஒரு இளைஞரை தொழில்நுட்பத்துறை தலைவராகக் கொண்டுவர அ.தி.மு.க தலைமை நினைத்தது.

அப்போது கோவை மாவட்டம் சிங்கநல்லூரைச் சேர்ந்த மறைந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சிங்கை கோவிந்தராசுவின் மகனும் ஐ.ஐ.எம்மில் படித்தவருமான ராமச்சந்திரனை நியமித்தது. இவர் கோவை பெர்க்ஸ் பள்ளியில் படித்தார். பின்பு பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோவும், பின்னர் பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் எஞ்சினியரிங் படிப்பையும் முடித்தார். பின்னர் ஐ.ஐ.எம்மில் மேற்படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வருகைக்கு அ.தி.மு.கவினரை உற்சாகப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மேலும் படிக்க