கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து, சூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்தாக ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார். ஒரே கட்டமாக படத்தை முடிக்க ஏ ஆர்.முருகதாஸ் திட்டமிட்டுள்ளார்.இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்படவுள்ளது.
லைக்காக நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதல்கட்டப்பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தர்பார் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், 2020 பொங்கலன்று இப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் தமிழகத்திலும் கேரளாவிலும் ப்யூர் பவர் அறிமுகம்
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தர்ட் ஐ அமைப்பின் ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்ட நடிகை கெளதமி
ஆகாஷ் நிறுவனம் சார்பாக ஜே.இ.இ. தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் கோவையில் அறிமுகம்