நடிகர் விஜய்யின் 63-வது படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.
தெரி ,மெர்சல், படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் படம் விஜய் 63. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புப் பணியின் போது 100 அடி உயரத்தில் கட்டப்பட்டு இருந்த மின் விளக்கு திடீரென கழன்று அங்கிருந்த ஊழியர் செல்வராஜ் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எலக்ட்ரீசியன் செல்வராஜை நடிகர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தர்ட் ஐ அமைப்பின் ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்ட நடிகை கெளதமி
ஆகாஷ் நிறுவனம் சார்பாக ஜே.இ.இ. தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் கோவையில் அறிமுகம்
கோவையில் சூயஸ் இந்தியா சார்பில் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம்