September 28, 2016 தண்டோரா குழு
டெல்லியில் மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடைப்பெற உள்ள கூட்டத்தில் கர்நாடக சார்பாக 5 பேர் பங்கேற்பார்கள் என சித்தராமையா அறிவிப்பு.
காவேரி பிரச்சனை தொடர்பாக மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் நாளை டெல்லியில் இரு மாநில அரசு கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து பெங்களுருவில் இன்று கார்நாடக மாநிலம் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
அதில் காவேரி நீர் கர்நாடகவின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது எனவே தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது ,தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாதது ஏன் என்பது குறித்து மத்திய அமைச்சர் உமாபாரதியிடம் தெரிவிக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் நாளை நடைபெறும் கூட்டத்தில் கார்நாடக சார்பில் 5 பேர் பங்கேற்பார்கள் எனவும் இரு மாநில வழக்கறிஞர்களும் இது குறித்து பேசுவார்கள் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கார்நாடக மாநிலம் முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழகம் சார்பில் இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.