பிரபல தொலைட்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழச்சி பிக் பாஸ் சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் என்றே சொல்லும் அளவிற்கு இந்நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது.
முதல் சீசனில் ஆரவும் இரண்டாவது சீசனில் நடிகை ரித்விக்காவும் டைட்டிலை வென்றனர். இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் 3 மீண்டும் கமலே தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் கமலை வைத்து பிக் பாஸ் 3 இக்கான ப்ரோமோ படப்பிடிப்புகள் ஆரம்பமாகியுள்ளது.
இதற்காக சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட பிக் பாஸ் வீட்டையொட்டிய செட்டில், கமல்ஹாசன் கலந்துகொண்ட காட்சிகள் ஷூட் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ப்ரோமோ ஓரிரு வாரங்களில் ஒளிபரப்பாகும் என்றும் தெரிகிறது.மேலும் இந்த ஷோவில் பங்குபெறும் முதல் போட்டியாளராக சாந்தினி தமிழரசன் இருப்பார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. முதல் சீஸனில் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, இரண்டாவது சீஸனில் ‘நீங்க நல்லவரா கெட்டவரா’ என்ற வசனத்துடன் கமல் அதிரடி காட்டினார். இந்த சூழலில் பிக் பாஸ் சீஸன் 3-ல் கமல் என்ன சொல்வார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆனைக்கட்டி கிராமப்புற மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வழங்கிய மெகா மருத்துவ முகாம்
மாணவிகளுக்கான தனித்துவமான தொழில்முனைவு தயாரிப்பு திட்டமான ‘நிபுணி கரியர் பாத்திங்’ நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திய அவ்தார் குழுமம்
பிஜிஎஸ் மருத்துவமனையின் கோயம்புத்தூரில் 150 படுக்கைகள் கொண்ட பன்முக சிறப்பு மருத்துவமனை பிரமாண்ட திறப்பு விழா
த்ரீ டாட்ஸ் அண்ட் ஏ டேஷ் என்னும் தலைப்பில் நடைபெற்ற கோவை ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஆண்டு விழா
கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு;பழைய நினைவுகளை பகிர்ந்து உற்சாகம்
தமிழும் சாகாது, வாசிப்பும் சாகாது, புத்தகங்கள் என்றைக்கும் இருக்கும் – கணபதி பி. ராஜ்குமார்