September 29, 2016 தண்டோரா குழு
தமிழ் மொழி மட்டுமே அறிந்த ஆண் புலி ஒன்று வேறு மாநிலத்திற்கு அனுப்பப்பட்டதால் அங்குள்ள மொழி புரியாததால் பராமரிப்பாளர்கள் சொல்வதை ஏற்க மறுக்கிறது.
சென்னையில் உள்ள பிரபல வண்டலூர் அறிஞர் அண்ணா வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து,உதய்பூர் சஜ்ஜன்கார் வனஉயிரியல் பூங்காவுக்கு அண்மையில் ராமா என்ற ஆண் வெள்ளைப்புலி வழங்கப்பட்டது.
மத்திய வனவிலங்குகள் சரணாலய ஆணையத்தின் உத்தரவின் படி இரண்டு ஓநாய்களை வண்டலூர் அறிஞர் அண்ணா வன விலங்குகள் சராணாலயத்துக்கு வழங்கிவிட்டு, அதற்கு பதிலாக ராமா என்ற வெள்ளைப்புலி உதய்பூருக்கு வழங்கப்பட்டது. ஆனால், ராமா புலி பிறந்ததில் இருந்தே சென்னையில் வளர்ந்து விட்டதாலும் அதன் பராமரிப்பாளர்கள் தமிழில் மட்டுமே அதற்கு கட்டளைகள் இட்டு பழக்கியதாலும், தற்போது மொழி தெரியாமல் ராமா புலி தடுமாடுகிறது. இதனால், உதய்பூர் புலி பராமரிப்பாளர்கள் இடும் கட்டளைகளை புரியாமல் தவிக்கிறது.
இதனால் ஒன்று ராமா புலி மேவரி மொழியை கற்க வேண்டும். இல்லையென்றால்,அதன் பராமரிப்பாளர்கள் தமிழ் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுக்குறித்து ராஜஸ்தான் மாநில தலைமை வனப் பாதுகாவலர் ராகுல் பட்நாசாகர் கூறுகையில், உதய்பூரில் ஏற்கனவே தாமினி என்ற பெண் புலி உள்ளது.இப்போது ராமா புலியும் வந்திருப்பதால், புலிகள் இனப் பெருக்கத்திற்கு வழி வகுத்துள்ளது என்று தெரிவித்தார்.