September 29, 2016 தண்டோரா குழு
சசிகுமார் படுகொலை வழக்கில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், சில தினங்களில் குற்றவளிகள் பிடிப்படுவார்கள் என சி.பி.சி.ஐ.டி பிரிவு ஏ.டி.ஜி.பி கரண் சின்ஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணி கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கடந்த 22ம்தேதியன்று மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை .
இந்நிலையில் இந்த வழக்குகினை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற காவல் துறை தலைவர் ராஜேந்திரன் உத்திரவிட்டார். இதனையடுத்து நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி பிரிவு ஏ.டி.ஜி.பி கரண் சின்ஹா கோவை மேற்கு மண்டல காவல் துறையினரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்டார். பின்னர் சம்பவம் நடைபெற்ற துடியலூர் பகுதிக்கு சென்ற அவர்,கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று காலை கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொலை சம்பவம் குறித்து உயிர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் உள்ளூர் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டதாகவும், குற்றவாளிகள் குறித்த முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதையடுத்து சில நாட்களில் அவர்கள் பிடிப்படுவர்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.