September 29, 2016 தண்டோரா குழு
ஒரு அரிய மருத்துவ நோயால் முகத்தில் சுருக்கங்களும், உள் இழுக்கப்பட்ட கண்களும் 80 வயதுடையவர் போன்ற தோற்றத்துடன் பங்களாதேஷ் நாட்டில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.
இந்த வித்தியாசமான பிறப்புடைய குழந்தை பங்களாதேஷ் நாட்டின் மகுரா என்னும் இடத்தில் பிறந்துள்ளது. ப்ரோகேரியா என்னும் அரிய மருத்துவ நிலைமை காரணமாக இவ்வகையான அபூர்வ பிறப்பு நிகழ்கிறது. இந்த அரிய நோயால் பிறக்கும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட எட்டு முறை அதிகமான வளர்ச்சி காணப்படும்.
அந்த கிராமத்து மக்கள் அக்குழந்தையை பார்பதற்கு மருத்துவமனைக்கும் ஆர்வமாக சென்று வருகின்றனர். அக்குழந்தையின் தந்தை, பிஸ்வஜித் பட்ரோ, ஒரு ஏழை விவசாயி. அதன் தாயார் பருள் பட்ரோ. தங்கள் குடும்பத்தின் புதிய அங்கத்தினரை வரவழைக்க மிகுந்த ஆவலோடு இருந்தனர். அவர்களுடைய மூத்த மகள் அபர்ணா, அவளுடைய தாயை போல் உள்ளதாகும், அவர்களுடைய மகனான அந்த குழந்தை தன்னை போல் உள்ளதாகவும், அதை பார்க்கும் போது சோகமாகவோ அல்லது என் மகன் இவ்வாறு பிறந்துவிட்டானே என்று தான் வேதனை அடைந்ததும் இல்லை என்று பிஸ்வஜித் கூறினார்.
இவ்வகை அரிய நோயால் பிறக்கும் குழந்தைகள் விரைவிலேயே இறந்து விடும். ஆனால், அக்குழந்தை நல்ல முறையில் ஆரோக்கியமாக வளரும் என்று அதன் குடும்பத்தினர் உறுதியாக நம்புகின்றனர். மேலும், அக்குழந்தையின் தந்தை அவருடைய வயதிற்கு அதிகமாக தெரிவதுபோல் அக்குழந்தையும் தெரிகிறது. அக்குழந்தைக்கு எந்த ஒரு பிரச்னையும் வராமல் நீண்ட ஆரோக்கியமான வாழ்கை வாழும் என்று நம்புவதாக, அதன் மாமா தெரிவித்தார்.தற்போது தாயும் சேயும் நன்றாக இருப்பதாக அம்மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.