• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வினோத முறையில் இறந்தவர் உடலை மூடிய குடும்பத்தினர்

September 30, 2016 தண்டோரா குழு

இறந்தவர் உடலை உப்பால் மூடி அவர் மீண்டும் உயிர் பிழைப்பார் என்று இறந்து போனவருடைய குடும்பத்தின் செய்கையால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெலகாவி மாவட்டம் கானாபூர் அருகே நந்தகடா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அரளு கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரப்பா (வயது 24). இவர், நேற்று முன்தினம் காலையில் தனது தோட்டத்திற்கு சென்ற போது, அவரை ஒரு விஷ பாம்பு கடித்துள்ளது. ஆனால் அது வெறும் பூச்சியின் கடி என்று நினைத்துள்ளார். ஆனால், அன்று இரவு உணவிற்கு பிறகு உறங்கிய அவருக்கு திடிரென அதிக வலி ஏற்பட்டு, இரத்த வாந்தி எடுத்துள்ளார். இதை கண்ட அவருடைய குடும்பத்தினர் உடனடியாக அவரை கானாபூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு ருத்ரப்பாவை பரிசோதித்த மருத்துவர், அவரை பாம்பு கடித்திருப்பதாக கூறியுள்ளார்.இதை கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தார்கள். பின்னர், அவரை தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.ஆனால், சிகிச்சை பலனின்றி ருத்ரப்பா பரிதாபமாக இறந்துவிட்டார்.

இந்நிலையில், அருகில் இருந்த கிராமத்தில் உள்ள பாம்புகளை பிடிக்கும் ஒருவர் ருத்ரப்பாவின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். பாம்பு கடித்து இறந்தவரின் உடல் மீது உப்பை போட்டு மூடினால், அவர் உயிர் பிழைத்து விடுவார் என்று கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய அவர்கள், சவக்கிடங்கில் இருந்து பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்ற ருத்ரப்பாவின் உடலை அவரது குடும்பத்தினர் நிறுத்தி, அவருடைய முகத்தை தவிர, ருத்ரப்பாவின் உடல் முழுவதும் உப்பை போட்டு மூடினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அவரது குடும்பத்தினரும், ருத்ரப்பா மீண்டும் உயிர் பிழைப்பார் என்று அங்கேயே இருந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. உடனே அவ்விடத்திற்கு அவர்கள் விரைந்து சென்றுள்ளனர். மேலும், பாம்பு கடித்து பலியான ருத்ரப்பா மீண்டும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை, யாரோ சொன்னதை நம்ப வேண்டாம் என்று ருத்ரப்பாவின் குடும்பத்தினருக்கு அறிவுரை கூறியுள்ளார்கள். அதன் பிறகு, இனிமேல் அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்று உணர்ந்த குடும்பத்தினர், ருத்ரப்பாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். பரிசோதனைக்கு பிறகு, அவருடைய உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று மதியமே அவருடைய இறுதி சடங்கு நடந்து முடிந்தது. இந்த சம்பவம் பெலகாவியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க